பிளாஸ்டிக் கிரைண்டர் பிளேடுகள்

பிளாஸ்டிக் கழிவுகளை அரைக்கும் இயந்திரத்துக்கு மாற்றுக் கத்தி தேவையா? பழைய பிளேடின் படம் அல்லது அளவுகளை அனுப்புங்கள்.

பிளேடு பற்றி அடிக்கடி கேட்கும் கேள்விகள்

என் மெஷினுக்குத் தேவையான அளவில் பிளேடு செய்து தருவீங்களா?

ஆம். உங்கள் மெஷினுக்குத் தேவையான அளவுக்கு ஸ்டீல் தகட்டை வெட்டி பிளேடு செய்து தருகிறோம்.

என்னென்ன தரத்தில் பிளேடு கிடைக்கும்?

வழக்கமான தரம், அதைவிட உயர்ந்த தரம் என இரண்டு வகைகளில் செய்து தருகிறோம்.

இரண்டு தரத்திலும் பிளேடுக்கு டெம்பர் செய்வீங்களா?

ஆம். தகட்டை அளவுக்கு வெட்டிய பிறகு ஒவ்வொரு பிளேடுக்கும் டெம்பர் செய்கிறோம். பிளேடு நீண்ட நாள் உழைக்க இது உதவும்.

விலை கேட்க என்ன அனுப்ப வேண்டும்?

  • இயந்திரத்தின் கம்பெனி பெயரும் மாடல் எண்ணும் தெரிந்தால், அவற்றைக் குறிப்பிடுங்கள்.
  • பிளேடின் நீளம், அகலம், தடிமன் ஆகியவற்றை மில்லிமீட்டரில் குறிப்பிடுங்கள். பொருத்தும் துளைகள் இருந்தால், அவற்றின் இடத்தையும் காட்டுங்கள்.
  • சுழலும் கத்தியா, நிலையான கத்தியா என்பதையும், எத்தனை தேவை என்பதையும் குறிப்பிடுங்கள். இரண்டும் தேவைப்பட்டால், ஒவ்வொன்றுக்கும் எண்ணிக்கையைத் தனியாகக் குறிப்பிடுங்கள்.

அளவுகள் தெரியவில்லையா?

வாட்ஸ்அப்பில் பழைய பிளேடின் தெளிவான படத்தையோ, அளவுகள் குறித்த வரைபடத்தையோ அனுப்புங்கள். விலை சொல்லும் முன் வேறு என்ன விவரம் தேவை என்று தெரிவிப்போம்.

அழைக்கவும்வாட்ஸ்அப்